பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு டோக்கன் வினியோகம் அதிகரிப்பு

Added : டிச 11, 2020
Share
Advertisement
சென்னை:பத்திரப்பதிவுக்கு வழங்கப்படும் டோக்கன் எண்ணிக்கையை, தற்காலிக அடிப்படையில் அதிகரிக்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள்உள்ளன. 'ஆன்லைன்' முறையில், பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதால், டோக்கன் பெறுவது கட்டாயமாகிறது.இதன்படி, ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில், ஒரு நாளைக்கு, 100 டோக்கன்கள்

சென்னை:பத்திரப்பதிவுக்கு வழங்கப்படும் டோக்கன் எண்ணிக்கையை, தற்காலிக அடிப்படையில் அதிகரிக்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள்உள்ளன. 'ஆன்லைன்' முறையில், பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதால், டோக்கன் பெறுவது கட்டாயமாகிறது.இதன்படி, ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில், ஒரு நாளைக்கு, 100 டோக்கன்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பெரும்பாலான சார் -பதிவாளர் அலுவலகங்களில், வழக்கமான நாட்களில், இந்த எண்ணிக்கை போதுமானதாக உள்ளது.குறிப்பிட்ட சில முகூர்த்த நாட்களில், பத்திரங்கள் பதிவு அதிகமாக இருக்கும். சில மாதங்களில், பதிவு குறைவாகவும் இருக்கும். இதன்படி, மார்கழி மாதத்தில் பலரும் பத்திரப்பதிவு செய்ய தயங்குவர். எனவே, மார்கழி மாதம் துவங்கும் முன் அதிகமானோர் பத்திரப்பதிவுக்கு வருகின்றனர்.இதில், 100க்கு மேற்பட்ட பத்திரங்கள் வரும் இடங்களில், டோக்கன் பற்றாக்குறையால் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:அதிக பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ள நாட்களில், 100க்கு மேல் டோக்கன் வழங்க வேண்டியுள்ளது. இதற்கு பதிவுத்துறை, தற்போது அனுமதி வழங்கியுள்ளது. தேவை அடிப்படையில், டோக்கன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதே போல, பதிவு பணிக்கு கூடுதலாக, பிறஅலுவலகங்களில் இருந்து, உதவியாளர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்கவும், பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.பதிவுக்கு வரும் யாரும், பணி முடியாமல் திரும்பி செல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X