திருவாலங்காடு: கொசஸ்தலை ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குப்பம்கண்டிகை ஊராட்சிக்கு செல்லும் தரைப்பாலம் உடைந்து, 20 கிராம மக்கள், போக்குவரத்து வழியின்றி, சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.'நிவர், புரெவி' புயலால், திருத்தணி வருவாய் கோட்டத்தில், 12 நாட்களாக, தொடர்ந்து மழை பெய்தது. இதனால், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. தவிர, நந்தி மற்றும் கொசஸ்தலை ஆற்றிலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை ஊராட்சி அருகே செல்லும், கொசஸ்தலை ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஆர்ப்பரித்து செல்லும் நீரால், குப்பம்கண்டிகை - மடத்துகுப்பம் இடையே செல்லும் தரைப்பாலம் உடைந்தது.இதன் வழியாக அரக்கோணம், மோசூர், பாகசாலை, சின்னம்மாபேட்டை உட்பட, 20 கிராமங்களைச் சேர்ந்தோர், பயன்படுத்தி வந்தனர். தற்போது, போக்குவரத்துக்கு வழியின்றி, சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.மேலும், தரைப்பாலத்தை உடைத்து வெளியேறி வரும் நீர், விவசாயிகள் பயிரிட்டிருந்த, நெல், கரும்பு, வேர்க்கடலை மற்றும் தோட்டப்பயிர் விதைக்கப்பட்ட வயலை மூழ்கடித்துள்ளது. இதையறிந்த ஒன்றிய அதிகாரிகள், தரைப்பால துண்டிப்பை பார்வையிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE