கடலுார் : கடலுார் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், ரஜினி பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
தெற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி விடுத்துள்ள அறிக்கை:ரஜினி பிறந்த நாளையொட்டி இன்று, தெற்கு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படஉள்ளது.காலை புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு, 8:00 மணிக்கு காரைக்காட்டில் அன்னதானம், 10:30 மணியளவில் பரங்கிப்பேட்டையில் பாபாஜி கோவிலில் சிறப்பு வழிபாடு, 12:00 மணிக்கு புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு வழிபாடு,அன்னதானம் வழங்கப்படுகிறது.
கீரப்பாளையத்தில் அன்னதானம் மற்றும் ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கல், மாலை 2:00 மணியளவில் வடலுாரில் அன்னதானம், 3:30 மணியளவில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு பிஸ்கட், பிரட், பால் பவுடர், பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கப்படுகிறது.சிதம்பரம் நகரத்தில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு உணவு, குமராட்சி கடைவீதியில் அன்னதானம், ஸ்ரீமுஷ்ணம் குமாரக்குடியில் அன்னதானம், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், கெங்கை கொண்டான் பேரூராட்சியில் அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட இணைச்செயலாளர் ஆசை தாமஸ், துணைச் செயலாளர்கள் ரஜினி பாஸ்கர், ராஜேந்திரன், அமீர் அப்பாஸ், இளைஞரணி செயலாளர் ரஜினி விக்னேஷ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோவிந்தராஜ், விவசாய அணி செயலாளர் பால்ராஜ் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE