குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டை, கேசவநாராயணபுரம் கிராமத்தில், பால விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவன், பெருமாள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமம், முதல் கால பூஜையும், நேற்று இரண்டாவது கால பூஜை, மகா பூர்ணாஹூதி, ஹோமம் நடந்தது. பின்னர் கடம் புறப்பாடாகி, பாலவிநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை, முன்னாள் ஊராட்சித் தலைவர் வழக்கறிஞர் சிவமணி, கீதா சிவமணி, பெருநிலக்கிழார்கள், கண்ணையன், செந்தில்நாதன், வைத்தியநாதன், வழக்கறிஞர்கள், சரவணன், முகுந்தன், சத்யா முகுந்தன், பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன், அருணகிரிநாதன், ஜெயக்குமார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.விாழவில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சிவக்கொழுந்து, த.வா.க., மாநில நிர்வாகி திருமால்வளவன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாஷியம், ஒன்றிய குழு துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தே.மு.தி.க., துணை செயலாளர் ராஜ், மாவட்ட கவுன்சிலர் ராமையன், ஊராட்சித் தலைவர்கள் ராமச்சந்திரன், ரவி, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்றனர். கும்பாபிேஷகத்தை கடலுார் சதீஷ் குருக்கள் நடத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE