'மெகா' பள்ளங்களால் விபத்து

Added : டிச 11, 2020
Share
Advertisement
தொடுகாடு: தொடுகாடு பகுதி நெடுஞ்சாலையோர, 'மெகா' பள்ளங்களால், வாகனங்கள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.திருவள்ளூர் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ளது, கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சி.இதன் வழியே, அரசு மற்றும் தனியார் பஸ், கனரக வாகனங்கள் என, தினமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.தொடுகாடு முதல், போளிவாக்கம் வரை, சாலையின்

தொடுகாடு: தொடுகாடு பகுதி நெடுஞ்சாலையோர, 'மெகா' பள்ளங்களால், வாகனங்கள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.திருவள்ளூர் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் உள்ளது, கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சி.இதன் வழியே, அரசு மற்றும் தனியார் பஸ், கனரக வாகனங்கள் என, தினமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.தொடுகாடு முதல், போளிவாக்கம் வரை, சாலையின் இருபுறமும் மணல் அரிப்பு ஏற்பட்டு, மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.இதனால், வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். பெரும்பாலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தான், பள்ளங்களில் விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர். நேற்று முன்தினம் இரவில், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, பாரத்துடன் வந்த லாரி, சாலையோர பள்ளத்தில் சிக்கியது.நெடுஞ்சாலையோர பள்ளங்கள் குறித்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் அளித்தாலும், நடவடிக்கை எடுக்கவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X