கடலுார் : ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு கடலுாரில் ஏழை மாணவியர் நால்வருக்கு நர்சிங் படிப்பிற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
கடலுார் வடக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைமை அலுவலகத்தில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. வடக்கு மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் இளமதி, கல்கி, ரமாதேவி, சண்முகி ஆகிய மாணவிகளுக்கு நர்சிங் படிப்பிற்கான கல்வி உதவித் தொகையை நகர செயலாளர் தாயுமான் வழங்கினார்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் ரஜினி பிரபாகர், ரஜினி மூர்த்தி முன்னிலை வகித்தனர். நகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சீனுவாசன், நகர செயற்குழு உறுப்பினர்கள் அப்பு, முஸ்தபா, சங்கர், மணிமாறன், வெங்கடேன், பாஸ்கர், நகர துணைச் செயலாளர் சீனுவாசன், சுப்பிரமணியன், மனோகரன், மணி பங்கேற்றனர். புதுப்பாளையம் தரைக்காத்த காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பாபா சரவணன், அறிவழகன் ஏற்பாடுகளை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE