வளர்ச்சி பணிக்கு அடிக்கல்திருத்தணி: திருத்தணி அடுத்த, மேல்முருக்கம்பட்டு கிராமத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில், 60 லட்சம் ரூபாய்; ஒன்றிய பொது நிதியில், 10.75 லட்சம் ரூபாய் என மொத்தம், 70.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடம் கட்ட, அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது. திருத்தணி ஒன்றியக் குழு தலைவர்தங்க தனம், கட்டடப் பணியை துவக்கி வைத்தார்.தாசில்தார் பொறுப்பேற்புதிருவள்ளூர்: திருவள்ளூர் வட்ட தாசில்தாராக பணியாற்றி வந்த ஜெ.விஜயகுமாரி, ஊத்துக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அவருக்கு பதிலாக, திருவள்ளூர் நகர நிலவரித் திட்ட தாசில்தாராக பணியாற்றிய கே.செந்தில்குமார், நியமனம் செய்யப்பட்டார்.இதையடுத்து, புதிய தாசில்தாராக, செந்தில்குமார், நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.அவரை, துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE