'சோனியா, மன்மோகனால் 2014ல் காங்., தோல்வி'

Updated : டிச 13, 2020 | Added : டிச 11, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: 'லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததற்கு, சோனியாவும், மன்மோகன் சிங்கும் தான் காரணம் ' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தன் பதவி காலம் முடிந்த பின், 'தி டிரமாட்டிக் டிகேடு, தி டர்பியூலண்ட் இயர்ஸ், தி கொலிஷன் இயர்ஸ்' ஆகிய புததங்களை
சோனியா, மன்மோகன்,காங், தோல்வி

புதுடில்லி: 'லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததற்கு, சோனியாவும், மன்மோகன் சிங்கும் தான் காரணம் ' என, மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தன் பதவி காலம் முடிந்த பின், 'தி டிரமாட்டிக் டிகேடு, தி டர்பியூலண்ட் இயர்ஸ், தி கொலிஷன் இயர்ஸ்' ஆகிய புததங்களை எழுதினார்.

இந்த புத்தகங்களும் வெளியாகிவிட்டன.ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை, 'தி பிரெசிடென்டல் இயர்ஸ்' என்ற தலைப்பில், பிரணாப் முகர்ஜி எழுதியுள்ளார். கடந்த ஆகஸ்ட், 31ல், அவர் இறந்துவிட்டார். அவர் எழுதிய, 'தி பிரெசிடென்டல் இயர்ஸ்' புத்கத்தை, ரூபா பதிக்கப்பகம், அடுத்த மாதம் வெளியிடுகிறது.

இந்த புத்கத்தில், அவர் கூறியுள்ள விஷயங்கள் பற்றி தெரிய வந்துள்ளதாவது:கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் அடைத்த படுதோல்விக்கு, சோனியாவும், மன்மோகன் சிங்கும் தான் காரணம். நான் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன், கட்சி பணிகளை கவனித்து வந்தேன். நான் ஜனாதிபதியான பின், கட்சியை சோனியாவால் சரியாக நிர்வகிக்க முடியவில்லை.

பார்லிமென்டிற்கு பல நாட்கள், மன்மோகன் சிங் வராததால், எம்.பி.,க்களால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதுதான், காங்கிரஸ் தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர், 2004ல் நான் பிரதமராகி இருந்தால், 2014ல் கட்சி தோல்வியை சந்தித்திருக்காது என்றனர்; இதை நான் ஏற்கவில்லை. கூட்டணி அரசை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில், பிரதமர் பதவியை ஏற்றார் மன்மோகன்; அவரது நிர்வாகத்தில், அந்த சுமை தொடர்ந்து நீடித்தது. இவ்வாறு, அந்த புத்தகத்தில் பிரணாப் எழுதியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-டிச-202018:39:10 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இது தான் வித்தியாசம்
Rate this:
Cancel
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
12-டிச-202018:09:08 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai ஈழத்த தமிழரின் வெற்றியை பறித்து , மூன்று லட்சம் தமிழினத்தை கொன்று குவித்த இவர்களது பாவமே இன்று மொத்த தேசமும் அதன் பயனை அனுபவிக்கிறது. இறைவன் சோனியாவையும் அவரின் பாவத்திலிருந்து நம் தேசத்தையும் காக்க பிரார்த்திப்போம்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
12-டிச-202016:54:26 IST Report Abuse
vbs manian அம்மையார் தனது சொந்த விஷயங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டார். கட்சியை பற்றியோ நாட்டை பற்றியோ எண்ணவில்லை.. ஏனென்றால் எல்லாமே அவருக்கு அந்நியம். ஒரு நாட்டிலும் அதன் கலாச்சாரத்திலும் ஆழமான தொடர்பு இல்லாதவர்களால் அந்த நாட்டோடு ஒட்ட முடியாது. நிஜமான புரிதல் வராது. மன்மோகன் சிறந்த பொருளாதார வாதீயாய் இருந்தாலும் நிர்வாக திறன் இல்லாததால் சுற்றி புற்றிசல் போன்று முளைத்த ஊழல் கொடிகளை களையெடுக்கவில்லை.அவரது அரசு கரடு முரடான சாலையில் ஓடும் பஞ்சர் ஆன இலக்கு இல்லாத அரசாக மாறிவிட்டது. ஆட்சி மாறி விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X