பொது செய்தி

தமிழ்நாடு

அதிக மழை கொட்டியும் நிரம்பாத ஏரிகள் காரணத்தை ஆராயும் பொதுப்பணித் துறை

Added : டிச 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:அதிக மழை கொட்டியும், ஐந்து மாவட்டங்களில், 81 ஏரிகளுக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து, பொதுப்பணித் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள, 1,644 ஏரிகள் பொதுப்பணித் துறையின், பாலாறு வட்டத்தில் உள்ளன. இதில், அதிக ஏரிகள், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்

சென்னை:அதிக மழை கொட்டியும், ஐந்து மாவட்டங்களில், 81 ஏரிகளுக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. இதற்கான காரணம் குறித்து, பொதுப்பணித் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள, 1,644 ஏரிகள் பொதுப்பணித் துறையின், பாலாறு வட்டத்தில் உள்ளன. இதில், அதிக ஏரிகள், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளன. குறைந்தபட்சமாக சென்னையில், 28 ஏரிகள் உள்ளன. 'நிவர், புரெவி' புயல்கள் காரணமாக, கொட்டிய கன மழையால், இந்த ஏரிகளுக்கு அதிக நீர்வரத்து கிடைத்தது.

ஏரிகளை சுற்றியுள்ள நீர்பிடிப்பு பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில், மழை நீர் தொடர்ந்து தேங்கியுள்ளது. ஆனால், 1,239 ஏரிகள் மட்டுமே மழையால், முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், 23 ஏரிகளில், 75 சதவீதத்திற்கு மேல் நீர் நிரம்பியுள்ளது. அதிக மழை பெய்த போதும், 59 ஏரிகளில், 25 சதவீதத்திற்கு மேலும்; 22 ஏரிகளில், 25 சதவீதத்திற்கு கீழும் நீர் நிரம்பியுள்ளது.

இதில், குடிமராமத்து திட்டம், நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட ஏரிகளும் உள்ளன. இந்த, 81 ஏரிகளுக்கும் போதிய நீர்வரத்து கிடைக்காத காரணத்தை, அரசு உத்தரவின்படி, பொதுப்பணி துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்த விவரங்கள், விரைவில், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் வாயிலாக, அரசிடம் சமர்பிக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-டிச-202002:24:42 IST Report Abuse
தமிழவேல் அந்த ஏரியில் மராமத்து செய்றேன்னு எடுத்த மண்ணையெல்லாம் சுத்திலும் தண்ணிவராத அளவுக்கு கொட்டி இருப்பானுவோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X