கடலுார் : கடலுார் ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமவிலாஸ் பஸ் அதிபர் சண்முகம்-ராஜேஸ்வரி தம்பதியர் மகன் இன்ஜினியர் விமல்ராஜிக்கும், சிறுவாச்சூரைச் சேர்ந்த சுப்ரமணி-மணி தம்பதியர் மகள் கவுசிகாவுக்கும் ஆத்துார், தலைவாசலில் திருமணம் நடந்தது.
விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி, மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக முதல்வர் பழனிசாமியை, பஸ் அதிபர் சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மஞ்சினி, சுந்தரம், பாரதி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கந்தசாமி, தலைவர் இளையப்பன், செயலாளர் ராமசாமி, இயக்குனர்கள் வெற்றிவேல், சம்பத், அறிவழகன், பெரம்பலுார் உதவி கலெக்டர் சக்திவேல், ஆடிட்டர் வள்ளியப்பன், ஆத்துார் நகர தி.மு.க., செயலாளர் பாலசுப்ரமணி, தொழிலதிபர்கள், பஸ் அதிபர்கள், வியாபாரிகள் மணமக்களை வாழ்த்தினர். கடலுார் ராஜேஸ்வரி சிட்பண்ட் உரிமையாளர்கள் சண்முகம், நிர்மல்ராஜ், சின்னதுரை நன்றி கூறினர். திருமண வரவேற்பு கடலுார் சுப்ராயலு திருமண மண்டபத்தில் நாளை 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE