பன்றிகள் உலா வருவதால் நகரில் சுகாதார சீர்கேடு| Dinamalar

பன்றிகள் உலா வருவதால் நகரில் சுகாதார சீர்கேடு

Added : டிச 11, 2020
Share
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பன்றிகள் அதிகளவு உலவுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.விருத்தாசலம் நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பெரியார் நகர் வடக்கு, தெற்கு, திரு.வி.க., நகர், ஆலடி ரோடு, ஜங்ஷன் ரோடு, எம்.ஆர்.கே., நகர், செல்வராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பன்றிகள் அதிகளவு உலவுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

விருத்தாசலம் நகராட்சியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். பெரியார் நகர் வடக்கு, தெற்கு, திரு.வி.க., நகர், ஆலடி ரோடு, ஜங்ஷன் ரோடு, எம்.ஆர்.கே., நகர், செல்வராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி நிர்வாகம் சார்பில் பன்றிகளை பிடிக்கும் பணி நடந்தபோது, வளர்ப்போருக்கும் தனியார் பணியாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், பல பன்றிகளை பிடிக்க முடியவில்லை. தற்போது அவை, அதிகரித்து பொது மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.விருத்தாசலம் நகர வீதிகளில் சுற்றும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X