மாமல்லபுரம்: வட இந்திய குடும்ப திருமணத்தால், எட்டு மாதங்களுக்கு பின், மாமல்லபுரத்தில் விடுதிகள் நிரம்பியுள்ளதால், நிர்வாகங்கள் உற்சாகத்தில் உள்ளன.மாமல்லபுரம், சுற்றுப்புற பகுதிகளில், கடற்கரை நட்சத்திர விடுதிகள் உள்ளன. மாமல்லபுரத்தில், தொல்லியல் சின்னங்களை காண வரும், உள்நாட்டு, வசதிமிக்க பயணியர், வெளிநாட்டுப் பயணியரை நம்பியே, இவை இயங்குகின்றன.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், ஏழு மாதங்களாக இயங்கவில்லை. அரசு வழிகாட்டு நெறிமுறைக்கு பின், விடுதிகளில் பயணியர் தங்க அனுமதித்து, இரு மாதங்களாக இயங்குகின்றன.இந்நிலையில், மாமல்லபுரம் நகர்ப் பகுதி தனியார் விடுதியில், வடஇந்திய குடும்பத்தைச் சேர்ந்தோரின் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதி விடுதிகள் என, 13ம் தேதி வரை, அனைத்து அறைகளும் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.எட்டு மாதங்களுக்கு பின், விடுதிகளில், விழா, உற்சாகம் என, களை கட்டியுள்ளது. விடுதி நிர்வாகங்களுக்கும், பெரும்தொகை, வருவாய் வாய்ப்பும் ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE