பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி குறித்து பணிக்குழு ஆய்வுக் கூட்டம்

Added : டிச 11, 2020
Share
Advertisement
கம்மாபுரம் : கம்மாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'கொரோனா' தடுப்பு ஊசி போடுவது குறித்து, பணிக்குழு கூட்டம் நடந்தது.பணிக்குழுத் தலைவர் தாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி, உறுப்பினர்கள் ஒன்றிய சேர்மன் மேனகா விஜயகுமார், பி.டி.ஓ.,க்கள் இந்திராதேவி, இப்ராகீம், கூடுதல் வட்டாரக் கல்வி

கம்மாபுரம் : கம்மாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'கொரோனா' தடுப்பு ஊசி போடுவது குறித்து, பணிக்குழு கூட்டம் நடந்தது.

பணிக்குழுத் தலைவர் தாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி, உறுப்பினர்கள் ஒன்றிய சேர்மன் மேனகா விஜயகுமார், பி.டி.ஓ.,க்கள் இந்திராதேவி, இப்ராகீம், கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் சந்திரலேகா முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் மங்கையற்கரசி, கலைமணி, சுகாதார மேற்பார்வையாளர் முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

மருத்துவம், சுகாதாரத்துறை பணியாளர்கள், வருவாய், கால்நடை, ஊரக வளர்ச்சி, வட்டார கல்வித்துறை, சமூக நலத்துறை, காவல் மற்றும் தீயணைப்புத்துறை உட்பட அத்தியாவசிய துறை களப்பணியாளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட நோயாளிகளுக்கு, முதற்கட்டமாக'கொரோனா' தடுப்பு ஊசி போட இலக்கீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தடுப்பூசி போடுவது குறித்து, அனைத்துத் துறை சார்பிலும், கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X