சென்னை: மாவட்டத்தில், இலவச தையல் இயந்திரம், சலவை பெட்டி பெற தகுதியுள்ள பயனாளிகள், விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நல அலுவலர் தெரிவித்தார்.மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், இலவச தையல் இயந்திரம், சலவை பெட்டி வழங்கப்படுகின்றன. அதன்படி, சென்னை மாவட்டத்தில், 20 - 45 வயதுக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.சலவை பெட்டி பெற, வயது வரம்பு இல்லை; சலவை தொழில் தெரிந்தவராக இருக்க வேண்டும். தகுதியுள்ள பயனாளிகள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.நடப்பாண்டில், தலா, 75 பேருக்கு, தையல் இயந்திரம், சலவை பெட்டி வழங்க, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட நல அலுவலர் தகவல் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE