புதுச்சேரி : விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்த பயிற்சி முகாம், சேலியமேடு உழவர் உதவியகத்தில் நடந்தது.
வேளாண் அலுவலர் கோகுலலஷ்மி வரவேற்றார். பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் பூமிநாதன், பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். இணை வேளாண் இயக்குனர் ராகவன், மண்வள அட்டையின் முக்கியத்துவம், வருவாய் இரட்டிப்பு குறித்து விளக்கினார்.
வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, பயிர் வளர்ச்சிக்கு தேவையான பேரூட்ட மற்றும் நுண்ணுாட்டச் சத்து குறித்தும், பரமநாதன் இயற்கை விவசாயத்தின் மண் வளம் குறித்தும், நடராஜன் அமில மற்றும் கார தன்மையுடைய மண்ணின் மீட்பு குறித்தும் பேசினர்.காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப அலுவலர் மணிமேகலை, நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சிக் கொல்லி மேலாண்மை பற்றியும், உழவியல் நிபுணர் ரவி ஒருங்கிணைந்த உர மேலாண்மை பற்றியும் எடுத்துரைத்தனர். வேளாண் அலுவலர் அமர்ஜோதி நன்றி கூறினார். காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE