குருக்களிடம் செயின் பறிப்பு

Added : டிச 11, 2020
Share
Advertisement
புதுச்சேரி : கதிர்காமம் மருத்துவமனை எதிரில் சாலையில் கோவில் குருக்கள் கழுத்தில் இருந்து 3 சவரன் தங்க செயினை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர், வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குருக்கள்,32; புதுச்சேரி தட்சிணாமூர்த்தி நகர், சபரி வீதியில் புதிதாக குடியேறும் மாமனார் ஞானசம்மந்த குருக்கள் வீட்டிற்கு உதவிக்காக, தனது

புதுச்சேரி : கதிர்காமம் மருத்துவமனை எதிரில் சாலையில் கோவில் குருக்கள் கழுத்தில் இருந்து 3 சவரன் தங்க செயினை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர், வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குருக்கள்,32; புதுச்சேரி தட்சிணாமூர்த்தி நகர், சபரி வீதியில் புதிதாக குடியேறும் மாமனார் ஞானசம்மந்த குருக்கள் வீட்டிற்கு உதவிக்காக, தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.கடந்த 9ம் தேதி இரவு, வீட்டு வேலைகளை முடித்து விட்டு, இரவு 11:15 மணிக்கு, கதிர்காமம் மருத்துவமனைக்கு எதிரில் உள்ள கடையில் பால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு ஸ்கூட்டரில் வந்த 2 பேர், தங்களுக்கும் பால் வாங்க காசு கொடு என கேட்டனர். ராஜேஷ் குருக்கள் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். அங்கிருந்து புறப்பட்ட இருவரும் சிறிது துாரம் சென்று மீண்டும் வந்து, சாலையில் நின்றிருந்த ராஜேஷ் குருக்கள் கழுத்தில் அணிந்திருந்த, 3 சவரன் தங்க செயினை அறுத்து கொண்டு தப்பிச் சென்றனர்.புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து, செயின்பறிப்பு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X