சென்னை அருகே, மான் வேட்டையாடிய நால்வரை, வனத்துறையினர் கைது செய்து, துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை அருகே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது, கொரஞ்சூர், ரெட்டிப்பாளையம் கிராமம். இங்கு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, காவலர் முகமது ஆசிக் மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியே வந்த, 'மகேந்திரா பொலீரோ' ஜீப் ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அதில் இருந்த நால்வரிடம் விசாரித்ததில், முன்பின் முரணாக பதில் அளித்தனர்.சந்தேகமடைந்த போலீசார், ஜீப்பை சோதனையிட்டபோது, சில மணி நேரத்திற்கு முன் கொல்லப்பட்ட நிலையில், ஆண் மான் ஒன்று சிக்கியது.இதுதொடர்பாக, சென்னை, எருக்கஞ்சேரியைச் சேர்ந்த நரசிம்மன், 54, விச்சூர் நாகராஜ், 35, மீஞ்சூர் பரணிதரன், 40, சோழவரம் தமிழ்ச்செல்வன், 42, ஆகியோரை, மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.மேலும், மான் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, 12 தோட்டாக்கள், ஜீப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, கும்மிடிப்பூண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த, கும்மிடிப்பூண்டி வனத்துறையினர், நான்கு பேரையும் கைது செய்து, துப்பாக்கி, தோட்டாக்களை எடுத்துச் சென்றனர்.இறந்த மான், 2 வயதுக்குள் இருக்கும். கழுத்து பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, மான் இறந்துள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE