உடல் உபாதையால் 22 டாக்டர்கள் அவதி

Added : டிச 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், இளநிலை மற்றும் முதுநிலை டாக்டர்கள், திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால், சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பீதியை ஏற்படுத்தியது.சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், இளநிலை மற்றும் முதுநிலை டாக்டர்கள், 9ம் தேதி இரவு வழக்கம்போல், விடுதியில் உணவு அருந்தியுள்ளனர். அதில், 22 டாக்டர்களுக்கு, வாந்தி, பேதி போன்ற உடல்

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், இளநிலை மற்றும் முதுநிலை டாக்டர்கள், திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால், சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பீதியை ஏற்படுத்தியது.சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், இளநிலை மற்றும் முதுநிலை டாக்டர்கள், 9ம் தேதி இரவு வழக்கம்போல், விடுதியில் உணவு அருந்தியுள்ளனர். அதில், 22 டாக்டர்களுக்கு, வாந்தி, பேதி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.உடனடியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பீதியை ஏற்படுத்தியது.இது குறித்து, மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், 'டாக்டர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். டாக்டர்கள் வெளியே, ஏதேனும் உணவு வாங்கி சாப்பிட்டதால், உடல் உபாதை ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, விசாரித்து வருகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-டிச-202011:17:15 IST Report Abuse
Velantex Ram மருத்துவமனை நிர்வாகம் உண்மையை சொன்னால் மட்டுமே மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X