சென்னை:''நடிகர் கமல் எட்டு மாதம் வீட்டில் இருந்து விட்டு, தற்போது ஓட்டுக்காக மட்டும் வெளியில் வருவது சந்தர்ப்பவாதம்,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:மக்களோடு மக்களாக இருப்போர் தான், தலைவர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். தலைவராக இருப்பவருக்கு, உயிர் பயம் இருக்கக் கூடாது. நடிகர் கமல், எட்டு மாதம் வீட்டில் இருந்து விட்டு, தற்போது ஓட்டுக்காக மட்டும் வெளியில் வருவது சந்தர்ப்பவாதம். கடந்த எட்டு மாதங்களில், முதல்வரும், அமைச்சர்களும், உயிர் குறித்து கவலைப்படாமல், கொரோனா தடுப்பு பணியாற்றினர்.
'டுவிட்டர்' சமூக வலைதள அரசியல் செய்வோருக்கு, மக்கள் அங்கீகாரம் கிடைக்காது. கமல் சுற்றுப்பயணம், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., உள்ளது; கட்சியினரை உற்சாகப்படுத்த, கட்சி தலைவர்கள் பேசுவது வழக்கம்.'டிவி' நடிகை சித்ரா மரண வழக்கு, போலீஸ் விசாரணையில் உள்ளது; உண்மை வெளி வரும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டம் அனைவருக்கும் சமம். அ.தி.மு.க., ஆட்சியில் தான், பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம், அ.தி.மு.க., சார்பில் வழங்கப்படும்; ஜெ., வழி பின்பற்றப்படும்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE