விவசாயிகளுடன் கலந்துரையாடல்: பா.ஜ., தலைவர்கள் அதிரடி திட்டம்

Updated : டிச 11, 2020 | Added : டிச 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் பின்னணி குறித்தும், வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கங்களையும் அளிப்பதற்காக, பா.ஜ., மூத்த தலைவர்கள் களமிறங்கவுள்ளனர். இதற்காக, நாடு முழுதும், 700 இடங்களில், விவசாயிகளுடன், பா.ஜ., தலைவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. போராட்டம்மத்திய அரசு அமல் படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு
விவசாயிகள், கலந்துரையாடல்: பா.ஜ., தலைவர்கள் அதிரடி திட்டம்

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் பின்னணி குறித்தும், வேளாண் சட்டங்கள் குறித்த விளக்கங்களையும் அளிப்பதற்காக, பா.ஜ., மூத்த தலைவர்கள் களமிறங்கவுள்ளனர்.

இதற்காக, நாடு முழுதும், 700 இடங்களில், விவசாயிகளுடன், பா.ஜ., தலைவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.


போராட்டம்மத்திய அரசு அமல் படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அழைத்து, அரசு தரப்பு, பல சுற்று பேச்சு நடத்தியும், முட்டுக் கட்டை நீடிக்கிறது. இந்த குழப்பமான சூழ்நிலை குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர். அதன்படி, அரசாங்க ரீதியிலான நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்தாலும், இதை அரசியல் ரீதியாகவும் அணுக, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு மீது, விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் தொடர்வதை தடுத்து நிறுத்தி, அதற்கு பதிலடி தர, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்துள்ளது. இதற்காக, நாடு முழுதும், 100 இடங்களில், பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் நடத்தப்படஉள்ளன. அதன் வாயிலாக, அரசின் பக்கம் உள்ள நியாயங்களையும், சட்ட ரீதியிலான உண்மைகளையும், விளக்குவது என
தீர்மானிக்கப்பட்டுள்ளது.


உரிய விளக்கம்மற்றொரு நடவடிக்கையாக, 700 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கெல்லாம், விவசாயிகளுடனான உரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார ஏற்பாடாக, இந்த நிகழ்ச்சிகள் வடிவமைக்கப் படவுள்ளன.
இவற்றில், தேசிய அளவிலான, முக்கியமான நிர்வாக பொறுப்புகளில் உள்ள தலைவர்களே, பங்கேற்கவுள்ளனர். இதற்காக, மத்திய அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் களமிறக்கப்படுகின்றனர். விவசாயிகள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்
அனைத்துக்குமே, உரிய பதிலடிகளை, இவர்கள் அளிப்பர்.

விவசாயிகள் போராட்ட விவகாரம் தொடர்பாக, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களை அளித்து, மத்திய அரசின் நிலைப்பாட்டில் உள்ள நியாயங்களையும், எடுத்துரைக்க உள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகான, மிகப்பெரிய முயற்சியாக, பா.ஜ., மேலிடம் எடுத்துள்ள, இந்த நிகழ்ச்சிகள், இன்னும் ஓரிரு நாட்களில் நாடு முழுதும் நடக்கவுள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
12-டிச-202011:19:37 IST Report Abuse
venkatan The farmers should completely analyse the pros and cons genuinely and appraise their apprehensions..They should aware of different policies of the political parties and not follow them blindly.so judge yourselves and accept the good ones and repulse non favorable ones and negotiate .You should only the toiler not at all the parties.here yourselves are the judged an no to follow tactics of parties.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-டிச-202005:24:01 IST Report Abuse
J.V. Iyer ஏதாவது சீக்கிரம் செய்யுங்கப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X