பொது செய்தி

தமிழ்நாடு

ரெடி பண்ணுங்க! பொதுத்தேர்வுக்கு மாணவர்களைதயாராகிறது 'மினிமம் மெட்டீரியல்'

Added : டிச 11, 2020
Share
Advertisement
கோவை:பள்ளிகள் திறக்க அரசு தயாராகிவரும் சூழலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடவாரியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தேர்வு செய்து, பயிற்சி அளிக்குமாறு,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் கல்லுாரி இறுதியாண்டு வகுப்புகள் நடப்பதால், விரைவில் பள்ளி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், வகுப்புகள் துவங்க

கோவை:பள்ளிகள் திறக்க அரசு தயாராகிவரும் சூழலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடவாரியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தேர்வு செய்து, பயிற்சி அளிக்குமாறு,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் கல்லுாரி இறுதியாண்டு வகுப்புகள் நடப்பதால், விரைவில் பள்ளி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், வகுப்புகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை உறுதிசெய்யும் வகையில், அமைச்சர் செங்கோட்டையன், கற்பித்தல் பணிகள் துவங்க, பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டத்தில், நகர், எஸ்.எஸ்.குளம், பேரூர், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களுக்கு பிரத்யேகமாக, தலைமையாசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது.இதில், பாட வாரியாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, முடிக்கப்பட்ட சிலபஸ் குறித்த தகவல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதோடு, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் வருகைப்பதிவு சமர்ப்பிக்க வேண்டும், புத்தகங்கள் வழங்கியது முதல், தற்போது வரை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகள், அதில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்து, அறிக்கை தயாரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகள், தற்போதைய இக்கட்டான சூழலிலும், சிலபஸ் முடித்து, மாதிரி தேர்வுகள் நடத்தி வருகின்றன. அரசுப்பள்ளிகளையும் முறைப்படுத்தும் வகையில், பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.கல்வித்துறை சார்பில், குறைக்கப்பட்ட சிலபஸ் தற்போது வரை வெளியிடாமல், இழுபறி நீடிக்கிறது. மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, அதிக பாடக்கருத்துகள் உள்ளதால், பள்ளிகள் திறந்தாலும், இனி முழுமையாக அனைத்து பகுதிகளையும், படிக்க வைப்பது சிரமம்தான்.இதற்காக, முக்கிய பகுதிகள் அடங்கிய, 'மினிமம் மெட்டீரியல்' தயாரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறியதாவது:பொதுத்தேர்வு ரேங்க் பட்டியலில், கடந்தாண்டை விட, அதிக தேர்ச்சி சதவீதம் பெற வேண்டிய சவால் உள்ளது. பள்ளிகள் திறக்காத சூழலிலும், பல ஆசிரியர்கள் மாணவர்களின் இருப்பிடத்திற்கே சென்று, வகுப்புகளை கையாள்கின்றனர்.குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின், கற்றல் நிலை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை முடிக்கப்பட்ட சிலபஸ் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதனடிப்படையில், மீதமுள்ள பாடத்திட்டம் முடிக்க ஆகும் காலம், பயிற்சி அளிக்க தேவையான அவகாசம் குறித்து, ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்.இதற்காக, ஐந்து பள்ளிகள் வீதம் குழுவாக பிரித்து, கருத்துகள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதோடு, பாடவாரியாக முக்கிய பகுதிகள் அடங்கிய, 'மினிமம் மெட்டீரியல்' தயாரிக்க, ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை கொண்டு, கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, பயிற்சி வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கும், இம்முறை பின்பற்றப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X