பொது செய்தி

தமிழ்நாடு

தேவதைகளின் அழகு சீக்ரெட்!

Added : டிச 11, 2020
Share
Advertisement
மெல்லிய சாரல் துளிர்க்க, மரங்கள் பூக்களை பொழிய, தென்றல் காற்றில் துப்பட்டா சிறகாய் பறக்க... என பெரும்பாலான படங்களில், ஹீரோயின் அறிமுக காட்சியில் நிச்சயம் துப்பட்டா இடம் பிடித்திருக்கும்.பெண்களின் ஆடைகளில் முக்கிய இடம் பிடித்துள்ள துப்பட்டா குறித்து, ஒரு லேட்டஸ்ட் அலசல் இங்கே!பனராசி பட்டுஇந்தியாவின் பாரம்பரிய அடையாளங்களில், ஒன்றாகவுள்ள பனராசி பட்டால் செய்யப்படும்
 தேவதைகளின் அழகு சீக்ரெட்!

மெல்லிய சாரல் துளிர்க்க, மரங்கள் பூக்களை பொழிய, தென்றல் காற்றில் துப்பட்டா சிறகாய் பறக்க... என பெரும்பாலான படங்களில், ஹீரோயின் அறிமுக காட்சியில் நிச்சயம் துப்பட்டா இடம் பிடித்திருக்கும்.பெண்களின் ஆடைகளில் முக்கிய இடம் பிடித்துள்ள துப்பட்டா குறித்து, ஒரு லேட்டஸ்ட் அலசல் இங்கே!பனராசி பட்டுஇந்தியாவின் பாரம்பரிய அடையாளங்களில், ஒன்றாகவுள்ள பனராசி பட்டால் செய்யப்படும் துப்பட்டா அணிந்தால், 'கிராண்ட் லுக்' காரண்டி. சேலை மாடலில் கிடைக்கும் இந்தவகை துப்பட்டாவை, விழாக்களுக்கு அணிந்தால் தனியாக ஜொலிப்பீர்கள். ரிச் பட்டு துணியால் செய்யப்படுவதால், எந்த வகை சுடிதார்களுக்கும், அம்சமாக பொருந்தி விடும். விழாக்களுக்கு சிவப்பு மற்றும் நீல நிறத்தையும், அலுவலகம், கல்லுாரிகளுக்கு கருப்பு மற்றும் மென்மை நிறங்களையும் பயன்படுத்தலாம்.புல்காரிபஞ்சாபின் பாரம்பரியமிக்க புல்காரி துப்பட்டா, அதன் எம்ப்ராய்டரி டிசைன்களுக்கு பெயர்பெற்றவை. புல் என்றால் மலர், காரி என்றால் கிராப்ட். இதில், எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் பெரும்பாலும் பட்டு, பருத்தி சந்தேரி போன்றவற்றால் போடப்பட்டிருக்கும்.புல்காரி துப்பட்டாக்களில், அடர் வண்ணங்கள் மேலோங்கி இருக்கும் என்பதால், கருப்பு, வெள்ளை போன்ற பிளைன் சுடிதார்களுக்கு, 'மேட்ச்' செய்யலாம். எத்தினிக் அல்லது இந்தோ வெஸ்டர்ன் மாடல் ஆடைகளுக்கும் 'டிரை' செய்யலாம்.வெல்வெட்ராயலாக தெரியவேண்டுமென்பவர்களுக்கு, வெல்வெட் துப்பட்டாக்கள் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, மணப்பெண்களின் கனவை, வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வெல்வெட் நிச்சயம் பூர்த்தி செய்யும். மற்ற மெட்டீரியலை விடவும், எடை மிகுதியாக இருக்கும் என்பதால், முழுமையாக வெல்வெட் இல்லாமல், மிக்ஸ் மேட்ச் டிரை செய்யலாம். இல்லையெனில், குறைந்த வேலைப்பாடுகள் கொண்ட, வெல்வெட் துப்பட்டாக்களை தேர்ந்தெடுக்கலாம்.கோட்டா பட்டி (Gota patti)கோட்டா பட்டி வேலை கொண்ட துப்பட்டாக்கள், பாரம்பரியமாக ராஜஸ்தானில் துப்பட்டா அணியப்படும் முறையாகும். மிகுந்த ஜரிகை மற்றும் எம்ப்ராய்டரி ஒர்க்கை விரும்பாதவர் நீங்களென்றால், கோட்டா பட்டி துப்பட்டா பெஸ்ட் சாய்ஸ்! இதில், மெட்டல் போன்று துப்பட்டாக்களின் பார்டர்களில் பேன்சி பேட்டர்ன் இருக்கும். இதன்தனித்துவ டிசைனை, வேறெதுவும் அடித்துக்கொள்ள முடியாது. அனைத்து வகை சல்வார்களுக்கும், கச்சிதமாக பொருந்தும்.கலம்காரிகலம்காரி என்பது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தோன்றிய, ஒரு தனித்துவமான ஜவுளி கலை வடிவம். கையால் வர்ணம் பூசப்பட்ட அல்லது பிளாக் பிரிண்டட் நுட்பத்தால் செய்யப்படுகிறது. இலைகள், மலர்கள், மயில் வடிவங்கள் அதிகளவில் இடம்பெற்றிருக்கும். கலம்காரி முக்கியமாக பருத்தியிலே செய்யப்படுகிறது. அழகான தோற்றம் கொண்ட இந்த துப்பட்டா, பிளைன் குர்தா, கமீஷ் டைப்புகளுக்கும் எடுப்பாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X