கோவை:கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் இன்றும், நாளையும் அனைத்து வாக்காளர் மையங்களிலும் நடக்கவுள்ளது. வாக்காளர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி, கோவை மாவட்ட, 10 சட்ட சபைதொகுதிகளின் வாக்காளர் வரைவு பட்டியல் கடந்த மாதம், 16ம் தேதி வெளியிடப்பட்டது.இப்பட்டியலில் விடுபட்டவர்கள், உரிய வயது பூர்த்தியடைந்தவர்கள், பெயர் சேர்க்கவும், இறப்பு, இடமாற்றம் போன்ற காரணங்களால் பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் போன்றவற்றுக்கு, விண்ணப்பம் அளிக்கலாம்.முதல்கட்ட முகாமில் சுமார், 60 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் சமர்ப்பித்து இருந்தனர். இரண்டாம் கட்ட முகாம், இன்றும், நாளையும் அனைத்து ஓட்டுசாவடி மையங்களிலும் நடைபெறவுள்ளது.www.nvsp.in அல்லது voters helpline app செயலி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியல், 2021 ஜன., 20ம் தேதியன்று வெளியிடப்படவுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE