சென்னை:தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் உட்பட, பல்வேறு கட்டடங்களுக்கு, முதல்வர் பழனிசாமி., 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில், 33வது மாவட்டமாக, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டு, 2019 நவம்பர், 22ல், முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. இம்மாவட்டத்திற்கு, தென்காசி நகரில், 28 ஆயிரத்து, 995 சதுர மீட்டர் பரப்பளவில், 119 கோடி ரூபாய் மதிப்பில், தரை மற்றும் ஆறு தளங்களுடன், மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டப்பட உள்ளது. இக்கட்டடத்திற்கு, முதல்வர் பழனிசாமி., 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய வளாகத்தில், பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்களுக்கும் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.ஐ.டி., நிறுவனங்கள்தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில், கோவை மாவட்டம், விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில், 114.16 கோடி ரூபாயில், தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்பட உள்ளது.
திருச்சி மாவட்டம், நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில், 48.10 கோடி ரூபாயில், தகவல் தொழில்நுட்ப கட்டடம் கட்டப்பட உள்ளது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு அரசு இசைக் கல்லுாரி வளாகத்தில், ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை அமைந்துள்ளது. இங்கு, 14.85 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
சென்னை, மயிலாப்பூர் லஸ் அவென்யுவில் அமைந்துள்ள, தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றத்திற்கு, 2.41 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டப்படுகிறது. 'வீடியோ கான்பரன்ஸ்'இவற்றுக்கும், தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயகுமார், உதயகுமார், பாண்டியராஜன், தலைமை செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE