சென்னை:தமிழகத்தில், திருமணம் முடித்து உதவித்தொகைக்காக காத்திருப்போருக்கு, இந்த மாதத்துக்குள் உதவித்தொகை வழங்கப்படும் என, சமூக நலத்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில், ஐந்து வகையான திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளி கல்வியை முடித்தோருக்கு, 25 ஆயிரம் ரூபாய்; பட்டப்படிப்பு முடித்தோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், 8 கிராம் தங்க நாணயமும் தரப்படுகிறது. கடந்தாண்டு விண்ணப்பித்த, 90 ஆயிரத்து, 500 பெண்களுக்கு, இதுவரை உதவித்தொகையோ, தங்கமோ வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, சில தினங்களுக்கு முன், நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதன்பின், தங்கம் கொள்முதலுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அது கிடைத்ததும், இந்த மாத இறுதிக்குள் அனைத்து பெண்களுக்கும், திருமண உதவித்தொகையை வழங்க, சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, 730 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE