கோவை:மார்க்கெட் சிறப்பாக உள்ள நிலையில், என்.டி.சி., மில்களை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய ஜவுளித்துறை செயலரை சந்திக்க, தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.எச்.எம்.எஸ்., பஞ்சாலை தொழிலாளர் சங்கத் தலைவர் ராஜாமணி கூறியதாவது:கோவையில் ஐந்து என்.டி.சி., மில்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் ஏழு மில்கள் உள்ளன. இவற்றில் நிரந்தரம், தற்காலிகம் என, 5,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தற்போது, தற்காலிக மில் நிறுத்தம் செய்யப்பட்டு, தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த மில்களில் 'ஸ்டாக்' இருந்த, ரூ.150 கோடி மதிப்பிலான நுால் விற்பனையாகி விட்டது. ஜவுளிப்பொருட்களுக்கு தற்போது நல்ல மார்க்கெட் உள்ள சூழலில், என்.டி.சி., மில்களை திறக்கக்கோரி, சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., என எட்டு தொழிற்சங்கங்கள் சார்பில், மத்திய ஜவுளித்துறை செயலர் உள்ளிட்டோரை டில்லியில் சந்தித்து, மனு அளிக்க தேதி கோரியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE