கோவை:இந்துஸ்தான் இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் கிரீன் இரா ரீசைக்ளிர்ஸ் நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில், கிரீன் இரா ரீசைக்ளிர்ஸ் நிறுவன நிர்வாக பங்குதாரர் பிரசாத் ஓமன குட்டன், கல்லுாரி முதல்வர் கருணாகரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.கல்லுாரி முதல்வர் கருணாகரன் கூறுகையில், ''கிரீன் இரா ரீசைக்ளிர்ஸ், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும். இந்நிறுவனத்துடன், கல்லுாரியின் மின்னணுவியல் மற்றும் கருவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகள் சார்பில், இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களுக்கு மின் கழிவுகள் குறித்த, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்; இவற்றை கையாள பயிற்சியும் அளிக்கப்படும்,'' என்றார்.துறைத்தலைவர்கள் ஆனந்த், ஆனந்தமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE