பொது செய்தி

தமிழ்நாடு

தமிழுக்கு 88 விருது: மந்திரி பெருமிதம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
சென்னை:''நாட்டில், எந்த மொழிக்கும் இல்லாத வகையில், தமிழுக்கு, 76 விருதுகள் வழங்கி, தமிழக அரசு கவுரவிக்கிறது,'' என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில், பாரதியாரின், 139வது பிறந்த நாளை முன்னிட்டு, பன்னாட்டு பாரதி விழா கொண்டாடப்பட்டது. அதன் துவக்கமாக, சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து, பாரதியார்

சென்னை:''நாட்டில், எந்த மொழிக்கும் இல்லாத வகையில், தமிழுக்கு, 76 விருதுகள் வழங்கி, தமிழக அரசு கவுரவிக்கிறது,'' என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில், பாரதியாரின், 139வது பிறந்த நாளை முன்னிட்டு, பன்னாட்டு பாரதி விழா கொண்டாடப்பட்டது. அதன் துவக்கமாக, சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து, பாரதியார் இல்லம் வரை, பாரதியின் உருவச் சிலை, பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன், வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் ரவி, ஷோபனா ரவி, பாரதியின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


அவசியம்

மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.அதில், அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: தற்காலத்தில், மொழி துவேஷங்கள் அதிகமாக உள்ளன. ஆனால், பாரதி, 'செப்புமொழி பதினெட்டுடையாள் எனில், சிந்தனை ஒன்றுடையாள்' என, தேச ஒற்றுமையையும், அனைத்து மொழிகளையும் கற்க வேண்டியதன் அவசியத்தையும் கூறினார். அவரின் கனவான, ஜதிப்பல்லக்கு உள்ளிட்ட பல விஷயங்கள் நிறைவேறியுள்ளன.

தமிழகத்தில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சான்றோருக்கு, தமிழக அரசு, 76 விருதுகளை அளித்து கவுரவிக்கிறது. மத்திய அரசும், 12 விருதுகளை, தமிழ் மொழிக்காக வழங்குகிறது. இதுபோல, மொத்தம், 88 விருதுகள், வேறு எந்த மொழிக்கும் வழங்கப்படவில்லை. எழுத்தாளர் களை மதிக்கும் சமூகம் முன்னேறும் என்பதற்கு, இது உதாரணம்.இவ்வாறு, பாண்டியராஜன் பேசினார்.

பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேசுகையில், ''பாரதிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும்,'' என்றார்.பாரதி விழா, வரும் 20ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும், காலை 9:00 மணி முதல் இரவு, 8:00 வரை, 'ஜூம்' செயலி வழியாக நடக்க உள்ளது.அமைச்சர்கள் மரியாதை!பாரதியாரின், 139வது பிறந்த நாள் விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழக அரசு சார்பில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, அவரது சிலையின் கீழ், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது உருவப்படத்திற்கு, அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின், பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள், நேற்று மலர் துாவி மரியாதை செலுத்தினர். சென்னையில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாநில தலைவர் முருகன் தலைமையில், மூத்த தலைவர் இல.கணேசன் மற்றும் நிர்வாகிகள், பாரதியார் படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'டுவிட்டர்' பக்கத்தில், 'பாரதி தாயின் புதல்வன், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் ஜெயந்திக்கு, என் அஞ்சலி. பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான முன்னோடி ஆவார். பாரதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார். இவரின் தேசபக்தி கவிதைகள், சுதந்திரப் போராட்டத்தின்போது, மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தன' என, தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X