பொது செய்தி

தமிழ்நாடு

பாரதியாரை போற்றும் பிரதமருக்கு முதல்வர் நன்றி

Added : டிச 12, 2020
Share
Advertisement
சென்னை:''பாரதியாரையும், திருவள்ளுவரையும், தன் உரையில், அதிகம் மேற்கோள் காட்டி பேசும் பிரதமருக்கு, தமிழக மக்கள் சார்பில் நன்றி,'' என, முதல்வர் பழனிசாமி., தெரிவித்தார். பாரதியார் பிறந்த நாளையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடந்த, உலகளாவிய பாரதி திருவிழாவில், முதல்வர்பழனிசாமி., 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பேசியதாவது: பாரதியாரையும், திருவள்ளுவரையும், தன்

சென்னை:''பாரதியாரையும், திருவள்ளுவரையும், தன் உரையில், அதிகம் மேற்கோள் காட்டி பேசும் பிரதமருக்கு, தமிழக மக்கள் சார்பில் நன்றி,'' என, முதல்வர் பழனிசாமி., தெரிவித்தார்.

பாரதியார் பிறந்த நாளையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடந்த, உலகளாவிய பாரதி திருவிழாவில், முதல்வர்பழனிசாமி., 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பேசியதாவது: பாரதியாரையும், திருவள்ளுவரையும், தன் உரையில் அதிகம் மேற்கோள் காட்டி பேசும் பிரதமருக்கு, தமிழக மக்கள் சார்பில் நன்றி. பாரதி விருது பெறும், சீனி விஸ்வநாதனுக்கு வாழ்த்துக்கள்.

கவிஞர், சமூக ஆர்வலர்,பத்திரிகையாளர், பாடலாசிரியர், சுதந்திர போராட்ட வீரர் என, பன்முகத்தன்மை கொண்டவர் பாரதியார். தமிழ் இலக்கிய உலகு மட்டுமல்லாது, உலக இலக்கிய அரங்கிலும், தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.அவரது படைப்புகளில் நாட்டுப்பற்று, தெய்வீகம், அன்பு, அறிவு, காதல், பக்தி, புரட்சி, கருணை, இரக்கம், தயவு, தியானம், யோகம், இசை, கலைகள், வேள்வி, அரசியல், வேதாந்தம், இதழியல் உள்ளிட்ட பல்வேறு உன்னத மனித உணர்வுகள் மிளிர்ந்தன.

மிக இள வயதிலேயே, எட்டயபுரம் சமஸ்தானத்தில், அரசவை கவிஞராக திகழ்ந்தார். தன் பாடல்களால், பாமர மக்களிடம், சுதந்திர வேட்கையை ஊட்டினார். தன் பாடல்களில், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், பெண் விடுதலைக்கும், சமூக சீர்திருத்தங்களுக்கும், மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்.மிக எளிய நடையில், பாமர மக்களுக்கும் புரியும் வகையில், கவிதைகள், கட்டுரைகள் எழுதி, மக்களிடம் விடுதலை விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதனால், அச்சமடைந்த ஆங்கிலேயர்கள், அவரது படைப்புகளுக்கு தடை விதித்ததோடு, அவரையும் சிறையில் அடைத்தனர்.சுதந்திர இந்தியா, எவ்வாறு இருக்க வேண்டும் என்று, மிகப்பெரும் கனவுகளை சுமந்து, கவிதைகள்புனைந்த தீர்க்கதரிசி பாரதியார். அவரது சிந்தனைகள், எட்டு திசைகளிலும் ஒலிக்க வேண்டும் என்பதற்காக, ஜெ., அரசு, பாரதியார் பாடல்களை, சீன மற்றும் அரபு மொழிகளில் மொழி பெயர்த்துள்ளது.இன்றும் வலிமையான ஒன்றுபட்ட பாரதமாக, இந்தியா விளங்க, பாரதியார் பாடல்கள் நமக்கு துணை நிற்கின்றன.

அவர் பிறந்த நாளில், அவர் புகழை போற்றுவதிலும், அவர் கொள்கைகளை கடைப்பிடிப்பதிலும், அவரை வணங்குவதிலும், மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.


'பெண் உரிமைக்கு குரல் கொடுத்தவர்'பாரதியார் பிறந்த நாளையொட்டி நடந்த விழாவில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் மோடி பேசியதாவது: பாரதியார் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பாரதியார் யார் என கேட்டால், அவரை பற்றி எளிதாக கூற முடியாது.கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக சேவகர், சுதந்திர போராட்ட வீரர் என, பன்முகங்களை உடையவர் அவர். தன் பாடல்கள் வாயிலாக, மக்களிடம் விடுதலை போராட்ட உணர்வையும் துாண்டினார்.

பாரதியாருக்கும், வாரணாசிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.பாரதியார், தான் வாழ்ந்த, 39 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களது முன்னேற்றம் குறித்து பேசினார். அவர்களின் உரிமைகளுக்காக போராடினார். 'பெண்கள் வலிமை பெற வேண்டும். ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும்' என, எண்ணினார். தாய்நாட்டை கண்களாககருதி, பாடல்களை இயற்றினார்.

பாரதியாரின் எழுச்சியை, இன்றைய இந்தியாவில் பார்க்கிறேன். இளைஞர்கள், பாரதியாரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். பழமை மற்றும் புதுமையை இணைத்து, இந்தியாவை உருவாக்க, பாரதியார் எண்ணினார். தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என, பாரதி நினைத்தார். இவ்வாறு, அவர் பேசினார்.பாரதியார் எழுதிய, 'அச்சமில்லை... அச்சமில்லை... அச்சமென்பது இல்லையே; இனியொரு விதி செய்வோம்; தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்' ஆகிய பாடல்களை, தன் உரையின் போது, பிரதமர் மோடி தமிழில் வாசித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X