திருப்பூர்:திருப்பூர் -- முத்தணம்பாளையம் பிரிவு ரோட்டில், ஒருங்கிணைந்த சாலை பராமரிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், திருப்பூர் தெற்கு உட்கோட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அவ்வகையில், விரிவாக்கம், சாலையை புதுப்பித்தல் மற்றும் செப்பனிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில், முத்தணம்பாளையம் பிரிவு ரிங் ரோடு முதல் செவ்வந்தாம்பாளையம்; சந்திராபுரம் முதல் வித்யாகார்த்திக் திருமண மண்டபம் வரை என, மொத்தம், 2 கி.மீ., துாரத்துக்கு, 4.18 கோடி ரூபாய் மதிப்பில் ரோடு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இப்பணிகளை, திருப்பூர் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதவி கோட்ட பொறியாளர் ராஜேஸ்கண்ணா, உதவி பொறியாளர் மோகன்ராஜ் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE