சென்னை:சென்னை, அயனாவரம்,இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 1.75 கோடி ரூபாய் மதிப்புள்ள, சி.டி.ஸ்கேன் மற்றும் 21 லட்சம் மதிப்புள்ள, 'மேமோகிராம்' போன்ற நவீன கருவிகளை, பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர் அர்ப்பணித்தார்.
அப்போது, அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதன்படி, 100 பேரை பரிசோதித்தால், 1.77 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில், 'மினி கிளினிக்' அமைக்க தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. எம்.பி.பி.எஸ்., முடித்த, 835 டாக்டர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணயம் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு, விஜயபாஸ்கர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE