கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கிரானைட் குவாரிகளுக்கு புதிதாக உரிமம் தர தடை

Added : டிச 12, 2020
Share
Advertisement
சென்னை:'மறு உத்தரவு வரும் வரை, மதுரை மாவட்டத்தில், புதிதாக கிரானைட் குவாரிகளுக்கு உரிமம் வழங்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் நடந்த, கிரானைட் குவாரி முறைகேடு குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சிறப்பு ஆணையராக நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அதிகாரி சகாயம் ஆய்வு செய்து, 2015ல், நீதிமன்றத்தில்

சென்னை:'மறு உத்தரவு வரும் வரை, மதுரை மாவட்டத்தில், புதிதாக கிரானைட் குவாரிகளுக்கு உரிமம் வழங்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நடந்த, கிரானைட் குவாரி முறைகேடு குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சிறப்பு ஆணையராக நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, அதிகாரி சகாயம் ஆய்வு செய்து, 2015ல், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். சி.பி.ஐ.,யின் சிறப்புக்குழு விசாரணை நடத்தவும், வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.இந்நிலையில், புதிய குழு அமைத்து, இழப்பீடு குறித்து மதிப்பீடு செய்யக்கோரி, தென்னிந்திய கிரானைட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. சகாயம் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து, அரசின் நிலையை தெரிவிக்கவும், கனிமவளங்கள் கடத்தப்படுவதை கண்காணிக்க, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் உத்தரவிட்டனர்.

வழக்கு, விசாரணைக்கு வந்த போது, அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ''சகாயம் குழு அளித்த, 212 பரிந்துரைகளில், 131 பரிந்துரைகளை ஏற்கிறோம்; 67ஐ ஏற்க முடியாது; 14 பரிந்துரைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டவை,'' என்றார்.

அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்துக்கு உதவவும், அனைவரையும் ஒருங்கிணைக்கவும், இந்த வழக்குக்கு என்றே ஒரு வழக்கறிரை நியமிக்கும்படி, அட்வகேட் ஜெனரலிடம், நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு, விரைவில் வழக்கறிஞரை நியமிப்பதாக, அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.உடன், 'மறு உத்தரவுபிறப்பிக்கும் வரை, மதுரை மாவட்டம், அதை சுற்றியுள்ள பகுதிகளில், புதிதாக குவாரிக்கான உரிமம் வழங்க கூடாது.

'மாநில, மாவட்ட எல்லையில்,கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும்' என்றும்,அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையின் போது, 'பரிந்துரைகளை சகாயம் குழு அளித்த பின், அதை ஏற்கக் கூடாது என, கிரானைட் உரிமையாளர்கள் எப்படி கோர முடியும். கிரானைட் வெட்டி எடுப்பதை, உரிமையாக கோர முடியாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், 'கீழவளவு, கீழையூர் உள்பட நான்கு கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமடையும் வகையில், அளவுக்கு அதிகமாக குவாரி நடந்துள்ளதாக, அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 'யானை மலை மட்டுமே மீதம் இருப்பதாகவும், அதிலும் சில பகுதிகள் வெட்டப்பட்ட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையை, ஜன., 22 க்கு, நீதிபதிகள் சிவஞானம், ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வு தள்ளி வைத்தது. அரசு தரப்பில் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X