நாகர்கோவில்:'ஆன்லைன்' வியாபார மோகத்தால், இரட்டை குழந்தையின் தாய், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் வட்டவிளையைச் சேர்ந்த, கூலி தொழிலாளி ரூபன் மனைவி நந்தினி, 26. திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஒன்றரை வயதில், இரட்டை குழந்தைகள் உள்ளன.குடும்ப வருமானத்தை அதிகரிக்க, தோழியர் ஆலோசனையில், நந்தினி, 'ஆண்ட்ராய்டு' அலைபேசி வாங்கி, ஆன்லைனில் அழகு சாதன பொருட்கள், சேலைகள் விற்பனை செய்தார்.
எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை.இந்நிலையில், வியாபாரத்தை விஸ்தரிக்க பணம் கேட்டதோடு, கணவரையும் அதில் ஈடுபட வலியுறுத்தினார். அவர் மறுத்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.கோபத்தில் வீட்டை விட்டு, ரூபன் வெளியேறினார். விரக்தி அடைந்த நந்தினி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆர்.டி.ஓ., மயில் விசாரணை நடத்தி வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE