பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை இடத்தில்கலெக்டர் அலுவலகம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
தென்காசி:தென்காசியில், அரசு மருத்துவக் கல்லுாரி அமைய இருந்த இடத்தில், கலெக்டர் அலுவலகம் கட்ட, அவசர அவசரமாக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து, 2019 நவ., 22ல் தமிழகத்தின், 33வது மாவட்டமாக, தென்காசி உருவானது. தென்காசி மேலகரத்தில், அரசு விதைப் பண்ணைக்கு சொந்தமான நிலத்தில், 35 ஏக்கரில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட, ஏற்பாடுகள் நடந்தன.இதை, தி.மு.க.,

தென்காசி:தென்காசியில், அரசு மருத்துவக் கல்லுாரி அமைய இருந்த இடத்தில், கலெக்டர் அலுவலகம் கட்ட, அவசர அவசரமாக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து, 2019 நவ., 22ல் தமிழகத்தின், 33வது மாவட்டமாக, தென்காசி உருவானது. தென்காசி மேலகரத்தில், அரசு விதைப் பண்ணைக்கு சொந்தமான நிலத்தில், 35 ஏக்கரில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட, ஏற்பாடுகள் நடந்தன.இதை, தி.மு.க., எதிர்த்த நிலையில், அங்கு கலெக்டர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, அரசு தரப்பில், '35 ஏக்கர் நிலம் உள்ள வேறு இடத்தை தேர்வு செய்ய உள்ளோம்' என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று அவசர அவசரமாக, தென்காசி அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில், புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட, காணொலி மூலம் முதல்வர், பழனிசாமி., அடிக்கல் நாட்டினார். துவக்கத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட குறைந்தபட்சம், 35 ஏக்கர் நிலம் தேவை என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தற்போது, தென்காசி அரசு மருத்துவமனை அருகே வெறும், 11 ஏக்கர் நிலத்தில், 119 கோடி ரூபாயில், ஆறு தளங்களுடன் கலெக்டர் அலுவலகம் கட்ட, பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. தென்காசி அரசு மருத்துவமனையை ஒட்டி, மருத்துவக் கல்லுாரி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில், தற்போது கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.கலெக்டர் அலுவலகத்திற்கு இந்த இடம் தேர்வானதால், அரசு மருத்துவமனை அருகே மருத்துவக் கல்லுாரி அமைய வாய்ப்பு இருக்காது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X