பொது செய்தி

இந்தியா

'இந்திய பெருங்கடல் பகுதிக்கு போட்டி போடும் உலக நாடுகள்'

Updated : டிச 12, 2020 | Added : டிச 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :''இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு உள்ள முக்கியத்துவம் காரணமாக, அங்கு ஆதிக்கம் செலுத்த, பல நாடுகள் போட்டி போடுகின்றன,'' என, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில், பிபின் ராவத், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:சர்வதேச வர்த்தக போக்குவரத்துக்கு, இந்திய - பசிபிக் பிராந்தியமும்,
 
'இந்திய பெருங்கடல் பகுதிக்கு

 போட்டி போடும் உலக நாடுகள்'

புதுடில்லி :''இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு உள்ள முக்கியத்துவம் காரணமாக, அங்கு ஆதிக்கம் செலுத்த, பல நாடுகள் போட்டி போடுகின்றன,'' என, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில், பிபின் ராவத், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:சர்வதேச வர்த்தக போக்குவரத்துக்கு, இந்திய - பசிபிக் பிராந்தியமும், குறிப்பாக, இந்திய பெருங்கடல் பகுதியும், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
இந்திய பெருங்கடலுக்கு, பூகோள ரீதியில் பல வசதிகள் உள்ளன. அதனால், அங்கு ஆதிக்கம் செலுத்தவும், தளங்களை அமைக்கவும், பல நாடுகள் முயற்சிக்கின்றன.


latest tamil newsஅதில், பொருளாதார செழிப்பு, படை பலம், அதிகரித்து வரும் போட்டி காரணமாக, சீனா, அதிக அக்கறை காட்டி வருகிறது. தற்போது, இந்துமாக்கடல் பிராந்தியத்தில், பல்வேறு திட்டங்களின் கீழ், 120க்கும் அதிகமான போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையிலும், இந்திய பெருங்கடல் பிராந்தியம், தொடர்ந்து அமைதியாக இருந்து வருகிறது. அண்டை நாடுகளின் எதிர்ப்பு, அதிகரிக்கும் போட்டி போன்ற சூழலை மீறி, வல்லரசாக வேண்டும் என்ற இலக்கை இந்தியா எட்டும். இதற்கு நீண்ட கால அடிப்படையிலான திட்டங்களும், முப்படைகளின் திறனை மேம்படுத்துவதும் முக்கியம்.
அத்துடன், அமைதியான, ஸ்திரமான பாதுகாப்பு சூழலும் நமக்கு தேவைப்படுகிறது. ஆனால், தற்போது, நாட்டின் பாதுகாப்பில் சந்தித்து வரும் சவால்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, எல்லை பாதுகாப்பு மிக முக்கியம். அதற்கு எதிரான சவால்களையும், அச்சுறுத்தல்களையும் ஆராய்ந்து, அதற்கேற்ப நம் படைகளை நவீனமயமாக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
12-டிச-202013:58:23 IST Report Abuse
mathimandhiri ஸ்திரமான பாதுகாப்புக்கு தொண்ணூறு சதவீதம் அச்சுறுத்தல் உள்நாட்டு துரோகக் கும்பல் தான் என்று அடித்துக் கூறலாம். இப்போது டெல்லியில் நடை பெறும் விவசாயிகள் கிளர்ச்சியில் அதில் பங்கேற்கும் விவசாயிகள் மட்டும் தான் இருக்கிறார்களா? இல்லை அந்நியக் கைக்கூலிகள், பிரிவினை வாதிகள், மதவாத அடிப்படைவாத கும்பல்கள், வெளியில் காசு வாங்கும் கீழ்த்தர அரசியல் கட்சியின் எடுபிடிகள், அவர்கள் மூலம் அனுப்பப் பட்டவர்கள் , ஊழல் அற்ற அரசின் ஸ்திரத்தன்மையை குறி வைத்துத் தகர்க்கத் திட்டமிடும் சதிகாரக் கும்பல்கள் இவை அல்லவா பெருமளவு ஊடுருவி இருக்கிறது? ஒரே ஒரு வேண்டாத சாவை அங்கு சீக்கியர் மேல் நிகழ்த்தி அதன் மூலம் உள்நாட்டுப் போரை த் துவக்க நினைத்துச் செயலாற்றும் அழிவு சக்திகள் மிகவும் மும்முரமாக செயல் பட்டு வருகிறார்கள்.
Rate this:
Cancel
shiva Kumar - TIruvarur,மாலத்தீவு
12-டிச-202010:04:21 IST Report Abuse
shiva Kumar சூர்யா சொன்ன மாதிரி , INDIAN IS ONLY THE KING OF INDIAN OCEAN NO ONE ELSE.
Rate this:
ponssasi - chennai,இந்தியா
12-டிச-202018:05:53 IST Report Abuse
ponssasiசூர்யாவுக்கு பணம் கொடுத்தால் இந்தியாவை பாகிஸ்தானு கூட பேசுவார். நடிகர்கள் பேசுவதை எல்லாம் உதாரணமாக காட்டாதீர்கள் அவர்களுக்கு அதன் அர்த்தம் கூட தெரியாது. அதை பேச கூட ஐம்பது டேக் வங்கியிருப்பார். சிங்கம் படத்துல ஒரு வில்லன் தமிழ்நாடு போலீஸ் மற்றும் தமிழ் நாட்டை மிக மிக கேவலமாக பேசுவான். அவனுக்கு காசுகொடுத்து அப்படி பேசவைத்து படம் எடுத்ததும் ஒரு தமிழன் தான். அந்த கேவலமான பேச்சை சரிசெய்து பேசவைத்து நீங்க சொல்லுற தமிழன் சூர்யா தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X