சின்னமனுார்:தேனி மாவட்டம் சின்னமனுாரில் அனுமதியின்றி கட்டப்பட்ட சர்ச் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
சின்னமனுாரிலிருந்து எரசக்கநாயக்கனுார் செல்லும் ரோட்டில் பள்ளிக்கோட்டைபட்டி அருகே சர்ச் கட்டப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் காணொலி காட்சி மூலம் சர்ச் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சர்ச் கட்டடம் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. திறக்க அனுமதிக்க கூடாது என பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சர்ச் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையே நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து உரிய அனுமதியின்றி கட்டடம் கட்டப்பட்டதை உறுதி செய்தனர்.
சின்னமனுார் ஸ்டேஷனில் இருதரப்பினரிடமும் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி பேசினார். அப்போது சர்ச் இல்லையென்றும், ஏழைகள் திருமணம் நடத்தி கொள்ள சமுதாய கூடம் தான் கட்டியிருப்பதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE