பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் இருந்து தமிழக வர இன்று முதல் 'இ பாஸ்' கட்டாயம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
கூடலுார்:கொரோனா பரவல் அதிகரிப்பால் கேரளாவில் இருந்து தமிழகம் வருவதற்கு இன்று முதல்(டிச.,12) மீண்டும் 'இ பாஸ்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் அருகேயுள்ள கேரளா இடுக்கி மாவட்டத்தில் பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. அங்கிருந்து தமிழகம் வருபவர்களால் மீண்டும் தேனி மாவட்டத்தில் கொரோனா பரவும் அபாயம்

கூடலுார்:கொரோனா பரவல் அதிகரிப்பால் கேரளாவில் இருந்து தமிழகம் வருவதற்கு இன்று முதல்(டிச.,12) மீண்டும் 'இ பாஸ்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் அருகேயுள்ள கேரளா இடுக்கி மாவட்டத்தில் பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. அங்கிருந்து தமிழகம் வருபவர்களால் மீண்டும் தேனி மாவட்டத்தில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து தேனி, - இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் நடத்திய ஆலோசனைக்குப்பின் இடுக்கி கலெக்டர் தினேசன், 'இடுக்கி மாவட்டத்தில் இருந்து குமுளி, கம்பமெட்டு, போடிமெட்டு, சின்னார் ஆகிய எல்லை வழியாக தமிழகம் செல்வோருக்கு இபாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ் பெற விரும்புவர்கள் Https://tnepass.tnega.org/#/user/pass என்ற வலைதளத்தில் அலைபேசி எண்ணை பதிவு செய்து உடனடியாக இ-பாஸ் பெறலாம்' என அறிவித்துள்ளார்.

உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி கூறுகையில், 'கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு மட்டும் இபாஸ் கட்டாயம். தமிழகத்தில் இருந்து தினந்தோறும் கேரளா சென்று திரும்பும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வைத்துள்ள பாஸ் இருந்தால் போதுமானது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X