பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயில் பணியாளர்கள் 70 பேர் மீது சந்தேகம்: கல்விச்சான்றிதழ்கள் ஆய்வு

Added : டிச 12, 2020
Share
Advertisement
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பணியாளர்கள் 168 பேரில் 70 பேரின் கல்வி சான்றிதழ் உண்மைதானா என ஆய்வு செய்யப்படும் நிலையில், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக சேவுகர் சத்தியமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். பள்ளிகள் வழங்கிய கல்விச்சான்றிதழ் அடிப்படையில்

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பணியாளர்கள் 168 பேரில் 70 பேரின் கல்வி சான்றிதழ் உண்மைதானா என ஆய்வு செய்யப்படும் நிலையில், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக சேவுகர் சத்தியமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். பள்ளிகள் வழங்கிய கல்விச்சான்றிதழ் அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதில் சேவுகர் காமாட்சி கொடுத்த 10ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என தெரியவந்ததை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதைதொடர்ந்து 168 பணியாளர்களில் 70 பேரின் கல்வித்தகுதி குறித்து சந்தேகம் ஏற்பட்டது, அவர்களின் கல்விச்சான்றிதழ் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் 30 பேரின் சான்றிதழ்கள் உண்மை எனத்தெரிந்தது. இந்நிலையில் 2008ல் போலியாக விருதுநகர் மாவட்ட பள்ளி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த சேவுகர் சத்தியமூர்த்தியை கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X