மதுரை:மதுரையில் பார்கின்சன் (நடுக்கவாதம்) நோயால் பாதிக்கப்பட்ட 62 வயது முதியவருக்கு ஆழ்மூளை துாண்டுதல் சிகிச்சையளித்து அப்போலோ டாக்டர்கள் அசத்தியுள்ளனர்.
பார்கின்சன் என்பது மூளையில் ஏற்படும் ஒரு கோளாறு ஆகும். டோபமைன் என்னும் ரசாயனஅளவு குறைவதால் ஏற்படுகிறது. கை, கால்களில் நடுக்கம், தசைகளில் அதிகப்படியான இறுக்கம், நடை மற்றும் உடலின் எல்லா அசைவுகளிலும் தளர்ச்சி, நடையில் தள்ளாட்டம் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.இந்த அறிகுறிகளைக் குறைக்க மருந்துகள் உதவலாம் என்றாலும், சிலருக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுவதில்லை.
மாறாக பக்க விளைவுகள் ஏற்படும்.இவர்களுக்கு டி.பி.எஸ். என்னும் ஆழ்மூளை துாண்டுதல் சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாகும். இம்முறையில் மூளையின் செயல்பாடுகளை சீர் செய்வதன் மூலம் நோயின் அறிகுறிகளை பெருமளவு குறைத்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வைக்கலாம்.இச்சிகிச்சையை முதியவருக்கு நரம்பியல் டாக்டர்கள் மீனாட்சி சுந்தரம், கார்த்திக், சுரேஷ், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஷியாம், சுந்தரராஜன், கெவின் ஜோசப், மயக்கவியல் நிபுணர் நிஷா ஆகியோர் வெற்றிகரமாக முடித்தனர்.
இதனால் முதியவர் நலம் பெற்றார். தென்மாவட்டங்களில் இந்த சிகிச்சை மேற்கொள்வது இதுவே முதன்முறை என மதுரை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE