இந்திய நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Added : டிச 12, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன் :அமெரிக்காவில், 'எச் - 1பி' விசாவுக்காக, இந்திய நிறுவனங்கள் சமர்ப்பித்த பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், வேலையின்மை பிரச்னை அதிகரித்துள்ளது.அமெரிக்க இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்து, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 'எச் - 1பி விசா' க்களை, இந்த ஆண்டு இறுதி வரை வினியோக்க தடை விதித்து,
இந்திய நிறுவனங்களின்
விண்ணப்பங்கள் நிராகரிப்பு

வாஷிங்டன் :அமெரிக்காவில், 'எச் - 1பி' விசாவுக்காக, இந்திய நிறுவனங்கள் சமர்ப்பித்த பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், வேலையின்மை பிரச்னை அதிகரித்துள்ளது.அமெரிக்க இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்து, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 'எச் - 1பி விசா' க்களை, இந்த ஆண்டு இறுதி வரை வினியோக்க தடை விதித்து, அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.


latest tamil news




புதிதாக விண்ணப்பிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.இந்நிலையில், எச் - 1பி விசாவுக்காக, இந்திய நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், அதிக அளவில் நிராகரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதன்படி, 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனத்தின், 15 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 'டெக் மஹிந்திரா' நிறுவனத்தில், 30 சதவீதம்; எல் அண்ட் டி நிறுவனத்தில், 26 சதவீதம்; இன்போசிஸ் நிறுவனத்தில், 58 சதவீதம்; காக்னிசன்ட் நிறுவனத்தில், 48 சதவீத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.எனினும், 'அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக்' போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களில், 10 சதவீதத்திற்கும் குறைவான விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
12-டிச-202017:23:06 IST Report Abuse
vnatarajan உள்நாட்டு மக்களுக்கு வேலையில்லை என்றால் எந்த நாடும் இப்படித்தான் செய்யும் அதுவும் தேர்தலுக்கு முன்னால் இப்படி செய்வது சகஜம்தான். ஆனால் இந்த கம்பெனிகள் அமெரிக்கர்களை வேலைக்கு சேர்த்தால் இந்தியர்களுக்கு கொடுப்பதை விட அதிகம் கொடுக்கவேண்டும் மேலும் அமெரிக்க வொயிட் காரங்கள் இந்தியர்களைப்போல் கடினமாக உழைப்பவர்களுக்கு அல்ல
Rate this:
Cancel
12-டிச-202017:00:03 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) அதேபோல் இங்கு திருட்டுத்தனமாக இருக்கும் பங்காளதேச மூர்க்க கள்ளக்குடியேறிகளையும் வெளியேற்றுங்கள்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-டிச-202014:16:24 IST Report Abuse
தமிழவேல் தேர்தல்தான் முடிஞ்சு போயிடுச்சே..... இதையே பைடன் செய்திருந்தால் சொம்புங்க எல்லாம் லாப திபோன்னு குதிச்சி இருப்பார்கள். 😂
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X