விழுப்புரம்:தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, பூத்துறையில் செம்மண் குவாரி உள்ளது. இதில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., கோதகுமார், ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், சதானந்தன், லோகநாதன், கோபிநாத் ஆகியோர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட 8 பேரும் ஆஜராகவில்லை.இதனால், வழக்கு விசாரணையை வரும் 15ம் தேதிக்கு, ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE