அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு

Added : டிச 12, 2020
Share
Advertisement
சென்னை:நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் இதய பரிசோதனை செய்த அவர், தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.சென்னை, கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.தி.மு.க., தலைவர்

சென்னை:நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் இதய பரிசோதனை செய்த அவர், தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

சென்னை, கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கினார். நீண்ட நேரம் நின்றவாறு, பொருட்களை வழங்கியதால், அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டது; வியர்வையும் கொட்டியது.

இதை அறிந்த நிர்வாகிகள், குடிக்க தண்ணீரும், காபியும் கொடுத்தனர். அப்போது, அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டார்.அங்கு அவருக்கு, ரத்த அழுத்த பரிசோதனை நடந்தது. ரத்த அழுத்தம் அதிகமாக காணப்பட்டதால், டாக்டர்கள் அறிவுரைப்படி, அங்கு, ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தார்.

பின், வெளியே வந்த ஸ்டாலின் கூறியதாவது:எனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடல் சோர்வாக இருந்ததால், டாக்டர்கள் ஆலோசனைப்படி, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன்.ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி,, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வேறு எந்த பிரச்னையும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

பின், மீண்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், ஸ்டாலின் பங்கேற்றார். தொடர்ந்து, டாக்டர்களின் அறிவுரைப்படி, ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவர் சென்றார். அவருடன் பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோரும் சென்றனர். மருத்துவமனையில் ஸ்டாலினுக்கு, ஈ.சி.ஜி., எக்கோ உள்ளிட்ட இதயம் சம்பந்தப்பட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதய பாதிப்புகள் ஏதும் இல்லை என, டாக்டர்கள் உறுதி செய்த பின், ஸ்டாலின், கட்சியின் தலைமையகமான அறிவாலயம் சென்றார்.அறிவாலயத்தில், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன்; பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில் அமர வைத்தார். இருவருக்கும் பொன்னாடைகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முதன்மை செயலர் கே.என்.நேரு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலர் சேகர்பாபு, தலைமை நிலைய செயலர் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X