அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் பொய் பிரசாரம் அமைச்சர் வேலுமணி பேட்டி

Added : டிச 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை:''கோவை வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாத தி.மு.க.,வினர், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்,'' என, அமைச்சர் வேலுமணி கூறினார். கோவையில், அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனிமொழி, பொய் பிரசாரம் செய்கிறார். கோவையை பற்றி எதுவும் தெரியாமல், யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்ததை பேசுகிறார்.இங்கு தான் அதிக பாலங்கள்,

கோவை:''கோவை வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாத தி.மு.க.,வினர், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்,'' என, அமைச்சர் வேலுமணி கூறினார்.

கோவையில், அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனிமொழி, பொய் பிரசாரம் செய்கிறார். கோவையை பற்றி எதுவும் தெரியாமல், யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்ததை பேசுகிறார்.இங்கு தான் அதிக பாலங்கள், வளர்ச்சிசார்ந்த கட்டுமான செயல்பாடுகள் நடந்து வருகின்றன.

கோவையில், ஐந்து அரசு கல்லுாரிகள் இந்த ஆட்சியில் தான் துவக்கப்பட்டுள்ளன. வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாத தி.மு.க.,வினர், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். உள்ளாட்சி துறையில் இருந்தபோது, ஸ்டாலின் ஏதும் செய்யவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.ஆய்வுக் கூட்டம்முன்னதாக, கோவை கலெக்டர் அலுவலக அரங்கில் கொரோனா தடுப்பு மற்றும் நலத்திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்தது.

கலெக்டர் ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
12-டிச-202023:25:19 IST Report Abuse
Vijay D Ratnam இதுக்கே கதறுனா எப்டி மணி. அவிங்க ஆட்சியில இல்ல. அதனால் தேர்தல் அறிக்கை வாய்க்கு வந்ததை அள்ளிவுடுவாய்ங்க. பாராளுமன்ற தேர்தலின் பொது எப்படி கல்விக்கடன், வேளாண் கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்வோம்னு சொல்லி வோட்டு கேட்டு ஜெயிச்சாய்ங்க. இப்பவரைக்கும் எவனாவது கடனை தள்ளுபடி செய்றோம்னு சொன்னீங்களே எப்போ தள்ளுபடி செய்வீங்கன்னு கேட்டானா? அல்லது இதெல்லாம் எப்படி சாத்தியம்னு எவனாவது கேட்டானா ? மொத்தமா வாக்குகளை கொண்டு போயி கொட்டுனாங்கள்ல. அது மாதிரி வரும் தேர்தலில் வேலை இல்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய், பட்டதாரி அல்லாத இளைஞர்களுக்கு நான்காயிரம் ரூபாய். 60 வயது மேற்பட்ட அனைவருக்கும் தமிழ்நாடு முழுவதும் இலவச பஸ் பாஸ். தீபாவளி, பொங்கலுக்கு இனி ரேஷனில் இலவசம் கிடையாது, ஒன்லி கேஷ்தான். கார்டுக்கு மாசாமாசம் ஆறாயிர ரூபாய். தவிர ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்துக்கு ஒரு ஃப்ரிட்ஜ், ஏ.சி, இலவசம். பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனி சைக்கிள் கிடையாது ஒன்லி ஸ்கூட்டர்தான். அரசுத்துறையில் காலி பணி இடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்பப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்தில் அடிஷனலாக ஒரு மோதிரம், முதியோர் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும், விவசாயிகள் கோரிக்கை அனைத்தும் கேட்டது அப்படியே நிறைவேற்றப்படும். இப்படி நிறைய நிறைய.... அப்ப என்ன செய்ய போறீங்க மணி. கந்துவட்டிக்கடன் தள்ளுபடி செய்யப்படும்னு சொன்னாக்கூட நம்மாளுங்க நம்பி வோட்டு போடுவாய்ங்க, அவ்ளோ அறிவு ஜீவிங்க நம்மாளுங்க.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
12-டிச-202003:16:34 IST Report Abuse
Baskar கனிமொழிக்கு கோவையை பற்றி ஒன்றும் தெரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X