கூடலுார்:கூடலுார் - கோழிக்கோடு சாலையோரம், 40 ஆண்டுக்கு பின், பூத்துக் குலுங்கும் மூங்கில் பூக்கள் சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார், துப்புகுட்டிபேட்டை பாலம் அருகே, கோழிக்கோடு சாலையை ஒட்டி, 40 ஆண்டு பழமையான மூங்கில்களில் இலைகள் உதிர்ந்து, மூங்கில் பூ பூத்துள்ளது. சாய்வான மூங்கில்களில் கொத்து கொத்தாக பூத்துள்ள பூக்களை உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் ரசித்து செல்கின்றனர்.
மூங்கில் பூ பூத்த பின், முற்றிலும் அழிந்துவிடும் என்பதால், அப்பகுதியில் எதிர்காலத்தில் மூங்கிலை பார்ப்பது அரிதாகி விடும். இதை ஆய்வு செய்த, தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், 'மூங்கில்கள், 40 ஆண்டுகளுக்கு பின் பூத்து, அதிலிருந்து மூங்கில் அரிசி உருவாகியுள்ளது. அவை உதிர்ந்த பின், காய்ந்து அழிந்து விடுவது இயல்பு' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE