சென்னை:இந்திய கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் இணைந்து நடத்திய, கடத்தல் தடுப்பு நடவடிக்கையில், 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 9 கிலோதங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்திய கடலோர காவல்படை வெளியிட்ட செய்திக்குறிப்பு:இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு, கடல் வழியே தங்கம் கடத்துவதாக, வருவாய் புலனாய்வுஇயக்குனரகத்திற்கு தகவல்கிடைத்தது.இதையடுத்து, இந்திய கடலோர காவல்படையின் ஒத்துழைப்புடன், வருவாய் புலனாய்வு இயக்குனரகம், மன்னார்வளைகுடா கடல் பகுதியில், இரண்டு நாட்களாக, கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
அப்போது, ராமநாதபுரம்மாவட்டம், மண்டபம் அருகே கடல்பகுதியில், இலங்கையில் இருந்து ஐந்து மீனவர்களுடன் வந்த, மீன்பிடி படகில் சோதனை நடந்தது. படகின் இன்ஜின் பகுதிக்கு கீழ், 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான, 9 கிலோ தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மீனவர்களின் படகு மற்றும் கைப்பற்றப்பட்ட தங்கம் ஆகியவை, வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
இதே போல, இந்தாண்டு பிப்ரவரியில், ராமேஸ்வரம் அருகே மீன்பிடி படகில் இருந்து, 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்திய கடலோர காவல்படை, கடல் பகுதிகளில், கடத்தல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE