பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் கடைகள் கட்டுமான பணி தீவிரம்

Added : டிச 12, 2020
Share
Advertisement
திருப்பூர்:தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில் கடைகள் கட்டும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னம்பாளையம் சந்தை வளாகம் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இந்த வளாகம் மேம்படுத்த திட்டமிடப்பட்டு பணி நடந்து வருகிறது.மொத்தம், 13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வளாகமாக மாற்ற திட்டமிட்டு பணி துவங்கியது. இதில்
 மார்க்கெட் கடைகள்  கட்டுமான பணி தீவிரம்

திருப்பூர்:தென்னம்பாளையம் சந்தை வளாகத்தில் கடைகள் கட்டும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தென்னம்பாளையம் சந்தை வளாகம் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இந்த வளாகம் மேம்படுத்த திட்டமிடப்பட்டு பணி நடந்து வருகிறது.மொத்தம், 13 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வளாகமாக மாற்ற திட்டமிட்டு பணி துவங்கியது. இதில் ஒரு பகுதியில் 187 கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இவற்றில் பெருமளவு பணி நிறைவு பெற்றுள்ளது. இவற்றுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.வளாகத்தின் மற்றொரு பகுதியில் 34 லாரிகள் நிறுத்தி சரக்குகள் இறக்கி வைக்கும் கிடங்குகள் கொண்ட வளாகம் அமைகிறது. மந்தமாக பணி நடந்த நிலையில், பண்டிகை விடுமுறைக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பிய நிலையில் இப்பணியும் துரிதமாக நடக்கிறது.இந்த வளாகத்தில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதி; கண்காணிப்பு கேமரா மற்றும் கழிப்பிடம் உட்பட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X