கோவை:கோவை விளாங்குறிச்சி பொருளாதார சிறப்பு மண்டல வளாகத்தில், 114.16 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்துக்கு, முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி கூறியதாவது: கோவையில், 2.42 ஏக்கர் பரப்பளவில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 20 ஆயிரம் பேர் நேரடியாகவும், 40 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுவர். இரண்டு லட்சத்து 66 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ஐந்து தளங்களில் கட்டடம் கட்டப்பட உள்ளது.
இத்தகவல் தொழில்நுட்ப பூங்கா, மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். கலெக்டர் ராஜாமணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரங்கநாதன், தகவல் தொழில்நுட்படத்துறை மேலாளர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE