சென்னை:தொழிற்சங்கங்கள், 'ஸ்டிரைக்' அறிவித்த நாளுக்கான சம்பள பிடித்தம், 'நிவர்' புயல் காரணமாக தப்பியுள்ளது. சிலருக்கு கூடுதல் விடுப்பும் தரப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்படும், தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர், நவம்பர், 26ல், ஸ்டிரைக் அறிவித்தனர்.'பஸ்களின் இயக்கம் பாதிக்கப்படாத வகையில், அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும். வராதோருக்கு சம்பளம் பிடிக்கப்படும்' என, போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள் சுற்றறிக்கை அனுப்பினர்.
ஆனால், நவ., 25, 26ல், 'நிவர்' புயல் காரணமாக, 16 மாவட்டங்களில், பஸ்கள் இயக்கத்தை அரசே நிறுத்தியது. அந்த நாட்களில் பணியாற்றியோருக்கு, கூடுதலாக இரண்டு நாள் ஈட்டிய விடுப்பு; பணிக்கு வராதோருக்கு, ஒரு நாள் சம்பளமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஸ்டிரைக் கால சம்பள பிடித்தம் பற்றிய சுற்றறிக்கை ரத்தாகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE