பிரதமர் வெளிநாட்டு பயண விபரம் : தகவல் அளிக்க ஐகோர்ட் தடை

Updated : டிச 12, 2020 | Added : டிச 12, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி :பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விபரங்களை தெரிவிக்கும்படி, நம் விமானப் படைக்கு, மத்திய தகவல் கமிஷன் பிறப்பித்த உத்தரவுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது.கடந்த, 2013 முதல், அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங் மற்றும், 2014ல், பிரதமராக பதவி ஏற்ற, நரேந்திர மோடி ஆகியோரின் வெளிநாட்டு பயண விபரங்களை அளிக்கும்படி, ஓய்வு பெற்ற, கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா
பிரதமர் வெளிநாட்டு பயண விபரம் : தகவல் அளிக்க ஐகோர்ட் தடை

புதுடில்லி :பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விபரங்களை தெரிவிக்கும்படி, நம் விமானப் படைக்கு, மத்திய தகவல் கமிஷன் பிறப்பித்த உத்தரவுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

கடந்த, 2013 முதல், அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங் மற்றும், 2014ல், பிரதமராக பதவி ஏற்ற, நரேந்திர மோடி ஆகியோரின் வெளிநாட்டு பயண விபரங்களை அளிக்கும்படி, ஓய்வு பெற்ற, கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர், மத்திய தகவல் கமிஷனில் விண்ணப்பித்தார்.


latest tamil news



இவர் கேட்ட விபரங்களை அளிக்கும்படி, விமானப்படைக்கு, மத்திய தகவல் கமிஷன் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, விமானப்படை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:பிரதமரின் வெளிநாட்டு பயணங்களின் போது, அவருடன் சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் அமைச்சக அதிகாரிகளின் பெயர் உள்ளிட்ட விபரங்களை, மனுதாரர் கேட்டுள்ளார்.


latest tamil news




இந்த தகவல்கள் மிகவும் ரகசியமானவை; இதை வெளியிடுவது, நாட்டின் இறையாண்மைக்கும், பிரதமரின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைக்கும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், மத்திய தகவல் கமிஷனின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.விமானப்படையின் மனு குறித்து விளக்கம் அளிக்கும்படி, மனுதாரர் லோகேஷ் பத்ராவுக்கு நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
வழக்கு, அடுத்த ஆண்டும், ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
12-டிச-202016:36:26 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ இந்த தகவல வச்சிகிட்டு அவரு கதறுவா போகிறார்? அவரு பயணங்களால விளைஞ்ச நன்மைகளை மறந்து கூட பேசமாட்டானுவ.
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
12-டிச-202015:57:41 IST Report Abuse
Nallavan Nallavan தகவல்களைக் கேட்டவர் நியாயமான காரணங்கள் இருந்தால் அவற்றைக் குறிப்பிட்டு கேட்டிருக்கலாம் .............
Rate this:
Cancel
12-டிச-202010:58:56 IST Report Abuse
ஆப்பு ஏன் கூடாது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X