சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு கடத்த முயன்ற

Added : டிச 12, 2020
Share
Advertisement
பந்தலுார்:கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற, 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து, கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக, கேரளா பறக்கும் படை இன்ஸ்பெக்டர் அனில் குமாருக்கு தகவல் கிடைத்தது. கேரள போலீசார், நேற்று கேரளா- - கர்நாடகா எல்லையில் முத்தங்கா சோதனை சாவடி அருகே உள்ள, கல்லுார் என்ற இடத்தில் வாகன சோதனையில்

பந்தலுார்:கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற, 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து, கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக, கேரளா பறக்கும் படை இன்ஸ்பெக்டர் அனில் குமாருக்கு தகவல் கிடைத்தது. கேரள போலீசார், நேற்று கேரளா- - கர்நாடகா எல்லையில் முத்தங்கா சோதனை சாவடி அருகே உள்ள, கல்லுார் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த லாரியை சோதனை செய்த போது, நான்கு சாக்கு பைகளில், 100 கிலோ கஞ்சா, கடத்தி செல்வது தெரியவந்தது. லாரியில் இருந்த சுவாதிக், 30, ஆபித் 35 ஆகிய இருவரை கைது செய்த போலீசார், லாரி மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்து, சுல்தான்பத்தேரி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.இந்த கும்பல், நீலகிரி மாவட்டத்துக்கும் கஞ்சா கடத்தி வருகிறதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. தமிழக போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X